மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
267 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
267 days ago
2025ம் ஆண்டின் முதல் வாரமான கடந்த வாரம் ஜனவரி 3ம் தேதி 7 படங்கள் வெளிவந்தன. ஆனால், இரண்டாவது வாரமான இந்த வாரம் ஜனவரி 10ம் தேதி இரண்டே இரண்டு படங்கள்தான் வெளியாக உள்ளன.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்', ஷேன் நிகாம், கலையரசன் நடித்துள்ள 'மெட்ராஸ்காரன்' ஆகிய இரண்டு படங்கள் ஜனவரி 10ம் தேதி வெளியாகின்றன. அவற்றோடு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள டப்பிங் படமான 'கேம் சேஞ்சர்' படமும் வெளியாகிறது.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரத்தில் இரண்டு படங்களும், அடுத்த வாரம் ஜனவரி 12ம் தேதி 'மத கஜ ராஜா', ஜனவரி 14ம் தேதி 'காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.
ஜனவரி 10ம் தேதி வெளியாகும் படங்களுக்கான தியேட்டர்கள் அடுத்த நான்கு நாட்களிலேயே குறைய வாய்ப்புள்ளது. கிடைக்கும் நான்கைந்து நாட்களில் இந்தப் படங்கள் வசூலித்தால்தான் உண்டு. ஏறக்குறைய இந்த வாரம் வெளியாகும் அனைத்து நேரடி தமிழ்ப் படங்களுக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து தருவதாக சொல்லப்படுகிறது.
267 days ago
267 days ago