ஆஸ்கர் நாமினேஷனில் 7 இந்தியப் படங்கள்
2024ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. மொத்தம் 207 படங்களை நாமினேஷன் பட்டியலுக்காகத் தேர்வு செய்துள்ள ஆஸ்கர் குழு.
தமிழ்ப் படமான 'கங்குவா', மலையாளப் படங்களான 'ஆடுஜீவிதம், ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், ', ஹிந்திப் படங்களான 'சந்தோஷ், ஸ்வதந்திரிய வீர் சவர்க்கார், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்', பெங்காலி படமான 'புடுல்' ஆகிய படங்கள் நாமினேஷனில் தேர்வாகி உள்ளன. இதற்கான வாக்களிப்பு இன்று ஜனவரி 8ம் தேதி ஆரம்பமாகி 12ம் தேதி முடிவடைகிறது. ஜனவரி 17ம் தேதி தேர்வான படங்கள் அறிவிக்கப்படும்.
இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட 'லாபட்டா லேடீஸ்' படம் சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான பிரிவில் பட்டியலிடப்படவில்லை.
இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது.