மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
264 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
264 days ago
மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களுக்கு பிறகு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட விஷால், மேடையில் மைக்கை பிடித்து பேசும்போதே அவரது கைகள் நடுங்கியது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வீடியோ வெளியானதை அடுத்து அவரைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தான் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, விஷால் குறித்து கூறுகையில், விஷால் ஒரு தைரியமானவர். இப்போது ஏதோ ஒரு மோசமான கட்டத்தில் இருந்து வருகிறார். இதிலிருந்து கண்டிப்பாக அவர் மீண்டு வருவார். அதற்கு அவரது தைரியமே அவருக்கு துணை நிற்கும். அதோடு என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவரது பெற்றோரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக மீண்டும் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார் என்று தனது நம்பிக்கையை தெரிவித்தார் ஜெயம் ரவி.
264 days ago
264 days ago