உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரியை போடுங்க : வடிவேலு

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரியை போடுங்க : வடிவேலு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு. தற்போது மாரீசன் மற்றும் கேங்கர்ஸ் படங்களில் நடித்து வருகிறார். மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக வடிவேலு பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு : ‛‛இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நான்கு நாளுக்கு முன்பே எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசை நடந்துவிட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்க போவேன். மாடு பிடிக்கிற ஆள் நான் கிடையாது. என்னைய அது தள்ளிவிட்டு போயிடும். பொங்கலை கொண்டாடி முடித்துவிட்டு மற்ற வேலையை பார்க்க போய் விடுவேன்.

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரியை போடுங்கனு சொன்னேன். அது ஜாலியான மேட்டர் தானே. வடிவேல் சொன்னதுல எதுவும் தப்பில்லை, ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன்.

தற்போது சுந்தர் சி-யின் ‛கேங்கர்ஸ்' படத்திலும், பஹத் பாசிலோடு ‛மாரிசன்' படமும் போய்கிட்டு இருக்கு. கேங்கர்ஸ் முழுநீள நகைச்சுவை படமாக இருக்கும். அடுத்து பிரபுதேவா உடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறேன். இப்போதெல்லாம் மாமன்னன் மாதிரி தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கிறேன் என்றார்.

தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை, அஜித்தின் கார் ரேஸ் பற்றிய கேள்வியை அவரிடத்தில் முன்வைக்க, வேற ஏதாவது பேசுவோமா என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !