உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றியின் ரகசியத்தை சொன்ன நயன்தாரா

வெற்றியின் ரகசியத்தை சொன்ன நயன்தாரா

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி படங்களும் அவ்வப்போது தயாரித்து வருகிறார். அதோடு சில பிஸ்னஸ்களும் செய்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டில் பெமி 9 என்கிற நிறுவனத்தை தொடங்கினார் . அந்த நிறுவனம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து மதுரையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் நயன்தாரா. அதில் முகவர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் நான் நம்பக்கூடிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று தன்னம்பிக்கை, இன்னொன்று சுயமரியாதை. இது இரண்டும் இருந்தால் நம்மை யார் கீழே இறக்க வேண்டும் என்று நினைத்தாலும் நாம் முன்னேறிக் கொண்டே தான் இருப்போம். யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் தவறாக நடந்து கொண்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நாம் நேர்மையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது. ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் அது உங்களது வாழ்க்கையை பெரிய அளவில் உயர்த்தி விடும் என்றார் நயன்தாரா. அவரது இந்த பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !