மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
261 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
261 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
261 days ago
2025ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு மூன்று நாட்களாகப் பிரிந்து புதிய படங்கள் வெளியாகின. ஜனவரி 10ம் தேதி 'வணங்கான், மெட்ராஸ்காரன்', ஜனவரி 12ம் தேதி 'மத கஜ ராஜா', ஜனவரி 14ம் தேதி 'காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
வெளியான ஆறு படங்களில் 'மத கஜ ராஜா' படம்தான் ரசிகர்களின் வரவேற்பிலும், வசூலிலும் முன்னணியில் இருக்கிறது. 12 வருடங்களுக்குப் பிறகு வந்த ஒரு படத்திற்கு இப்படியான வரவேற்பு கிடைப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. படம் வெளியான இந்த மூன்று நாட்களில் 10 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் கடந்துள்ளது.
முதல் நாள் வசூலை விடவும் அடுத்த இரண்டு நாட்களுக்கான வசூல் ஏறுமுகமாகவே உள்ளதாம். இந்த வாரம் முழுவதும் விடுமுறை தினம் என்பதாலும், அனைத்து சென்டர்களுக்குமான படமாக இது இருப்பதால் இன்னும் அதிக வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொங்கல் போட்டியில் 'மத கஜ ராஜா' தான் வசூலில் முந்தி வருகிறது.
261 days ago
261 days ago
261 days ago