ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்'
ADDED : 310 days ago
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் முதல் நாளில் 186 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அந்தத் தொகை குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது. அதனால், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அப்டேட்டைத் தயாரிப்பு நிறுவனம் நிறுத்திவிட்டது.
அவர்களது அடுத்த வெளியீடாக நேற்று வெளியான 'சங்கராந்திகி வஸ்தனம்' படத்தைப் பற்றி மட்டுமே அதிகமான அப்டேட்டுகளை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இப்படமும் மற்றொரு பொங்கல் வெளியீடான 'டாகு மகாராஜ்' தெலுங்குப் படமும் எதிர்பாராத விதமாக சிறப்பான ஓபனிங்கைக் கொடுத்துள்ளன. இதனால், 'கேம் சேஞ்ஜர்' வசூல் அப்படியே குறைந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.