உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம்

பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம்

நடிகர் சந்தானம் தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெறுகிறது. ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. தற்போது அடுத்து சந்தானம் புதிதாக ஒரு கிரைம், திரில்லர் ஜானரில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுவதற்காக சந்தானம் சமீபத்தில் பிரபல கிரைம், திரில்லர் எழுத்தாளர் ஆன ராஜேஷ் குமாரை சந்தித்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ராஜேஷ் குமார் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு குற்றம் 23, அக்னி தேவி, யுத்த சத்தம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இவர் சரத்குமாரின் 'சண்டமாருதம்' படத்திற்கு திரைக்கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !