டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை
ADDED : 5 minutes ago
கடந்த ஆண்டில் ரஜினி பிறந்தநாளில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், வருகிற டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் 75வது பிறந்தநாளில் மீண்டும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த அண்ணாமலை என்ற சூப்பர் ஹிட் படம் ரீ ரிலீசாகப் போகிறது. கடந்த 1992ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, சரத்பாபு, ராதாரவி, நிழல்கள் ரவி, மனோரமா, விணு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தேவா இசையமைத்தார். ரஜினி நடித்த படங்களில் அதிகப்படியாக வசூலித்த படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த அண்ணாமலை படம் ரீ-ரிலீசிலும் அதிகப்படியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.