உதயநிதியை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தமிழ்குமரன் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை இவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதேபோல் வித்லவ் பட தயாரிப்பாளர் சவுந்தர்யா, மகேஷ் ஆகியோரும் உதயநிதியை சந்தித்து பேசியுள்ளனர்.
ஆனால், சமீபத்தில் வெற்றி பெற்ற ஆர்.கே.செல்வமணி தலைமையிலான இயக்குனர் சங்க நிர்வாகிகள், குஷ்பு தலைமையிலான சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவரை சந்திக்கவில்லை. செல்வமணி தனது மகளை பார்க்க அமெரிக்கா சென்று இருப்பதாலும், பாஜவில் குஷ்பு இருப்பதாலும் சந்திப்பு நடக்கவில்லை என த கவல்.
துணை முதல்வர் ஆன பின் உதயநிதி சினிமா விழாக்களை தவிர்த்து வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் நடித்த அரிசி பட விழாவில் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார். ரெட் ஜெயன்ட் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வது இல்லை. சமீபத்தில் இளையராஜா பாராட்டு விழா, தமிழக அரசின் விருது விழாவில் மட்டுமே பங்கேற்றார்.