கிக் பாக்ஸிங் வீராங்கனையாக நடிக்கும் ஸ்ரீலீலா
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி படிப்படியாக தென்னிந்திய அளவில் இளம் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார் ஸ்ரீலீலா. இதனை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டின் இளம் ஹீரோ கார்த்திக், ஆர்யனுடன் இணைந்து 'ஆஷிக்கி 3' என்கிற படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீலீலா. இந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்ததாக மீண்டும் பாலிவுட்டில் அதே ஹீரோவுடன் ஜோடியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீலீலாவை தேடி வந்துள்ளது.
தஜமுல் இஸ்லாம் என்கிற கிக் பாக்ஸிங் வீராங்கனையின் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்டு இந்தப்படம் உருவாகிறது. இதில் கிக் பாக்ஸிங் வீராங்கனையாக ஸ்ரீலீலா நடிக்கிறார். அவரது கோச்சாக கார்த்திக் ஆர்யன் நடிக்கிறாராம். இதற்கு முன்னதாகவே பகவந்த் கேசரி படத்தில் நடித்தபோது இது போன்ற பயிற்சிகளை எடுத்ததுடன் ஒரு சண்டைக் காட்சியிலும் ஸ்ரீலீலா நடித்திருந்தார். அதனால் கிக் பாக்ஸர் ஆகவும் அவர் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.