மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
260 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
260 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
260 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
260 days ago
ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கேம் சேஞ்சர். தமன் இசையமைத்த இந்த படம் ஜன., 10ம் தேதி திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு முதல் நாள் அதிகப்படியாக வசூலித்த இந்த படம் அடுத்தடுத்த நாட்களில் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனரான ஷங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாக்ஸ் ஆபிஸில் கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறைந்திருப்பது பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த படத்திற்காக படமாக்கப்பட்ட நிறைய காட்சிகளை கத்தரித்து விட்டோம். அந்த அளவுக்கு அசல் காட்சிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக ஓடியது. என்றாலும் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக பாதி காட்சிகளை கத்தரித்து விட்டோம் . ஒருவேளை ரசிகர்களுக்கு பிடித்தமான காட்சிகளை கத்தரித்துவிட்டு, பிடிக்காத காட்சிகளை வைத்து விட்டோமோ என்று தெரியவில்லை என தனது மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஷங்கர் .
260 days ago
260 days ago
260 days ago
260 days ago