மேலும் செய்திகள்
ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள்
254 days ago
நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக்
254 days ago
கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து
254 days ago
'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாமன் '. இப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது '' ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் பேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி வருகிறது. படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.
மாமன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு கோடை விடுமுறையில் படம் ரிலீஸ் என தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர்.
254 days ago
254 days ago
254 days ago