உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா 2 - மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்

புஷ்பா 2 - மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்


சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 5ல் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. 1850 கோடி வசூலைக் கடந்து பெரும் வசூல் சாதனை படைத்தது.

அப்படத்தின் வெளியீட்டில் முதலில் நீக்கப்பட்ட 20 நிமிடக் காட்சிகளை மீண்டும் சேர்த்து இரண்டு தினங்களுக்கு முன்பு ஜனவரி 17 முதல் திரையிட்டார்கள். அந்தக் காட்சிகளுடன் படத்தைப் பார்க்க ரசிகர்கள் மீண்டும் ஆர்வமாக உள்ளனர்.

பொங்கல், சங்கராந்தி விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படத்தையும் பார்க்க மீண்டும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளனர். 'கேம் சேஞ்ஜர்' படத்தை விடவும் இந்தப் படத்திற்கான முன்பதிவு அதிகமாக உள்ளதை ஆன்லைன் இணையதளங்களிலும் பார்க்க முடிகிறது.

தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்ட 20 நிமிடக் காட்சிகளுடன் படம் திரையிடப்படுகிறது. மற்ற மொழிகளில் அவற்றைச் சேர்க்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !