உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாக்ஸ் ஆபீஸ் பொங்கல் வின்னர் 'மத கஜ ராஜா'

பாக்ஸ் ஆபீஸ் பொங்கல் வின்னர் 'மத கஜ ராஜா'

2025ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு “மெட்ராஸ்காரன், வணங்கான், மத கஜ ராஜா, காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'தருணம்' படத்தை ஒரே நாளில் தியேட்டர்களிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.

மற்ற படங்களில் 'மத கஜ ராஜா' படம் மட்டும்தான் சொல்லிக் கொள்ளும்படியாக அனைத்து சென்டர்களிலும் ஏறக்குறைய ஹவுஸ்புல் என்ற நிலையில் தியேட்டர்களில் கடந்த ஒரு வாரமாக ஓடியுள்ளது. 'காதலிக்க நேரமில்லை' படத்திற்கு மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற சென்டர்களில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. 'வணங்கான்' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் வசூல் இல்லை. 'மெட்ராஸ்காரன்' படம் வந்த சுவடு தெரியவில்லை. 'நேசிப்பாயா' படத்தை பெரிய அளவில் விளம்ரப்படுத்தவில்லை, இல்லையென்றால் சுமாராக ஓடியிருக்கும்.

அனைத்து படங்களில் 'மத கஜ ராஜா' படம் மட்டும் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 12 வருட பழைய படம் வெளிவந்து பொங்கல் வின்னர் ஆகியுள்ளது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024ம் வருடம் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' படம்தான் முதல் வெற்றிப் படமாக அமைந்தது. அதுபோல இந்த 2025ம் ஆண்டிலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'மத கஜ ராஜா' படம் முதல் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !