மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
252 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
252 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
252 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
252 days ago
97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கான நாமினேஷன் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் மியூசிக்கல் க்ரைம் டிராமா படமான 'எமிலியா பெரஸ்' படம் மொத்தமாக 13 விருதுகளுக்கான நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது. எப்படியும் நான்கைந்து விருதுகளை இந்தப் படம் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த படம், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த படத் தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த மேக்கப் ஹேர்ஸ்டைல், சிறந்த ஒரிஜனல் ஸ்கோர், சிறந்த ஒலி, உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிடுகிறது.
'எமிலியா பெரஸ்' படத்தை ஜாக்ஸ் ஆடியர்ட் இயக்கியுள்ளார். இப்படத்தில் திருநங்கையான கர்லா சோபியா காஸ்கோன் படத்தின் டைட்டில் கதாபாத்திரமான 'எமிலியா பெரஸ்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகைகக்கான போட்டியில் ஒரு திருநங்கை போட்டியிடுவது இதுவே முதல் முறை.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே என அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் ஆஸ்கர் விருதில் சிறந்த நடிகைக்கான போட்டியில் ஒரு திருநங்கையின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
252 days ago
252 days ago
252 days ago
252 days ago