சவால் விடும் தாரா நடிகை
ADDED : 276 days ago
கதையின் நாயகியாக நடித்த படங்கள், பெரிதாக கை கொடுக்காததால், மீண்டும் மார்க்கெட்டில் இருக்கும், 'ஹீரோ'களுடன் நடித்து தன்னை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டத் துவங்கினார், தாரா நடிகை.
ஆனால், மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்களோ, தாராவை ஒப்பந்தம் செய்யாததுடன், முத்தின கத்தரிக்காய் என்பது போன்று கிண்டல் செய்து, கடுப்பேற்றி விட்டனர். இதனால், தற்போது, பீட்சா நடிகரை வைத்து, ஒரு படத்தை தானே தயாரித்து, அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.
மேலும், 'என்னை முத்தின கத்தரிக்காய் என்று சொன்னவர்கள் முன், மீண்டும் நான் இளசுகளை கவரும் நாயகியாக ஜொலித்துக் காட்டுகிறேன்...' என்றும் சவால் விட்டுள்ளார், தாரா நடிகை.