மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
220 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
220 days ago
தொழிலில் எதிரும் புதிருமாக இருந்தபோதும் நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லாலும், மம்முட்டியும். மதங்களை தாண்டிய அவர்களின் நட்பு கேரளாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மோகன்லால் ஆசீர்வாத் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகி 25 ஆண்டுகள் ஆனதை பாராட்டி 'எல்2: எம்புரான்' படத்தின் அறிமுக விழாவில் மம்முட்டி அவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
பிருத்விராஜ் இயக்கதில் மோகன்லால் நடித்து பெரிய பெற்றி பெற்ற படமான லூசிபரின் இரண்டாம் பாகம் 'எல்2 : எம்புரான்' என்ற பெயரில் தயாராகிறது. இதில் பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய் குமார் மற்றும் பைஜு சந்தோஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்துள்ளார், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிக்கிறது. மார்ச் 27ம் தேதி மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.
220 days ago
220 days ago