உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்மா ஆனார் ஹரிப்ரியா

அம்மா ஆனார் ஹரிப்ரியா

கன்னட நடிகையான ஹரிப்ரியா தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண், நான் மிருகமாய் மாற உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் வசிஷ்டா சிம்ஹாவை காதலித்து வந்தார். 2023ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹரிப்ரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஹரிப்பிரியாவுக்கு நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஹரிப்பிரியா, தற்போது குழந்தை பெற்றுள்ள நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !