உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வைரல் கிளிக்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வைரல் கிளிக்ஸ்


பிரபல மாடல் அழகியான லாவண்யா சின்னத்திரையில் ‛சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் நடிக்க தொடங்கினார். அந்த தொடர் பாதியிலேயே முடிந்துவிட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அழகு பதுமையாக வலம் வரும் லாவண்யாவுக்கு தமிழகத்தில் ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே ரசிகர் கூட்டமாக உள்ளது. இந்நிலையில், லாவண்யா அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !