உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெளனம் பேசியதே தொடரில் என்ட்ரி கொடுக்கும் பௌசில் ஹிதயா

மெளனம் பேசியதே தொடரில் என்ட்ரி கொடுக்கும் பௌசில் ஹிதயா

சினிமா நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் ‛அருவி' தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். அருவி தொடர் முடிவடைந்த பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த அவர் சில தினங்களுக்கு முன், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். துளசி ரோல் எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்று கூறி விலகினார்.

இதனையடுத்து யார் துளசியாக நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்திரா தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை பௌசில் ஹிதயா தான் மெளனம் பேசியதே தொடரில் துளசியாக நடிக்க இருக்கிறார். இவர் கவின் நடித்த டாடா படத்திலும் நடித்தார். மேலும் ஒரு புதிய சீரியலிலும் நாயகியாக நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !