ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
ADDED : 375 days ago
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்குகின்றார். இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். இதற்கு தமன் இசையமைக்கிறார்.
கடந்த பல மாதங்களாக இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக சந்தீப் கிஷன் சம்மந்தப்பட்ட காட்சிகளுடன் படமாக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.