மகாநதி தொடர் நிறைவு
ADDED : 14 minutes ago
விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வந்த தொடர் மகாநதி. லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்திருந்தனர். மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடித்தனர். பிரவீன் பென்னட் இயக்கினார்
2023 ஜனவரி மாதம் தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடர், கடந்த வெள்ளிக்கிழமை 881 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது.
காவேரிக்கு நினைவுத் திருப்பிய நிலையில், விஜய் - காவேரி திருமணம் செய்து கொள்ளும் காட்சியுடன் தொடர் நிறைவடைந்தது. இந்த காட்சியில் தொடரில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்று நடித்தனர்.