தெலுங்கு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் கவுதம் மேனன்!
ADDED : 244 days ago
சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற படத்தை இயக்கியவர் குணசேகர். இவர் தற்போது புதுமுகங்களை ஜோடி சேர்த்து தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார். இப்படத்தில் சாரா அர்ஜுன், நாசர், ரோஹித், விக்னேஷ் ஆகியோருடன் இயக்குனர் கவுதம் மேனன், பூமிகா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கப் போகிறார்கள்.
ஏற்கனவே தெலுங்கில் சீதாராமம், மைக்கேல், உஸ்தாத் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருத்த கவுதம் மேனன் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கப் போகிறாராம். மேலும், கவுதம் மேனன் கடைசியாக மம்முட்டி நடிப்பில் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற மலையாள படத்தை இயக்கினார். அப்படம் கடந்த ஜனவரி 23ல் வெளியானது.