மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
202 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
202 days ago
2025ம் ஆண்டின் முதல் அதிக வெளியீடாக நேற்றைய வெளியீடுகள் அமைந்தது. நேற்று மட்டும், “2 கே லவ் ஸ்டோரி, 9 எஎம் டூ 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே, அது வாங்கினால் இது இலவசம், பேபி & பேபி, தினசரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, கண்நீரா, ஒத்த ஓட்டு முத்தையா“ ஆகிய ஒன்பது படங்கள் வெளிவந்தன.
நேற்றைய முதல் நாளில் இந்தப் படங்களுக்கு மிகக் குறைவான அளவில் மட்டுமே ரசிகர்கள் வந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனை படங்களிலும் 'காதல் என்பது பொதுவுடமை' படத்திற்கு மட்டுமே விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் இந்தப் படத்தின் கதை ஓரினக் காதல் பற்றிய படம் என்பதால் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்க்க வருவது சந்தேகம்தான் என தியேட்டர் வட்டாரங்களில் வருத்தப்படுகிறார்கள்.
கடந்த வாரம் வெளிவந்த 'விடாமுயற்சி' படமும் வசூலைத் தரவில்லை, இந்த வாரப் படங்களும் தடுமாறிப் போய் உள்ளன. அடுத்த வாரம் வரும் படங்களாவது தங்களைக் காப்பாற்றுமா என தவித்துப் போய் உள்ளார்கள் தியேட்டர்காரர்கள்.
202 days ago
202 days ago