உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பில்கேட்ஸிற்கு டீ கொடுத்த சாய்வாலா உடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்ட அர்பாஸ் கான்

பில்கேட்ஸிற்கு டீ கொடுத்த சாய்வாலா உடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்ட அர்பாஸ் கான்

2024ம் வருடம் பிரபல மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் இந்தியாவிற்கு விசிட் அடித்திருந்தார். அப்படி நாக்பூர் வந்தபோது அங்கே சாதாரணமாக டீ விற்கும் ஒரு டோலி சாய்வாலாவிடம் டீ வாங்கி சாப்பிட்டார். தனது தனித்துவமான டீ தயாரிக்கும் பாணியும், அதை பரிமாறும் முறையிலும் கவனம் ஈர்த்து வந்த அந்த சாய்வாலா அதன் பிறகு ரொம்பவே பிரபலமானார். பின்னர் கடந்த வருடம் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகவும் சல்மான்கானுடன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சல்மான் கானின் சகோதரரும் நடிகருமான அர்பாஸ் கான், இந்த டோலி சாய்வாலாவை மும்பைக்கு வரவழைத்து சந்தித்துள்ளார். இவருடன் சேர்ந்து நகரில் பல இடங்களில் புதிதாக சாயா கடைகளை உருவாக்கும் பிசினஸ் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரின் சந்திப்பு குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !