மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
201 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
201 days ago
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்த பாடலில் ரஜினியும் அவருடன் இணைந்து நடனம் ஆடுவதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ, லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 போன்ற படங்களில் தற்போது பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல்தான் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஹவாலா என்ற ஒரு பாடலுக்கு தமன்னா நடனமாடி இருந்தார்.
201 days ago
201 days ago