மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
223 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
223 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
223 days ago
'பிக்கி : என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த பிக்கி மாநாட்டின் துவக்க விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநாட்டை கமல்ஹாசனும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைத்தனர். பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது: இந்திய சினிமா நமது கலாச்சாரத்தின் உண்மையான தூதராக திகழ முடியும். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு நீண்டகால தொலைநோக்கு திட்டம் நமக்கு தேவை. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்தாமல் சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மேலும், சினிமா மீதான மாநில பொழுதுபோக்கு வரியை மறுபரிசீலனை செய்து சீர்திருத்த வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக துணை முதல்வரிடம் தெரிவிக்கிறேன். என்றார்.
223 days ago
223 days ago
223 days ago