மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
198 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
198 days ago
கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மேகா ஷெட்டி. கன்னட சீரியல் 'ஜோதே ஜோதேயலி' மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா' உள்பட ஏழு படங்களில் நடித்துள்ளார் . அவரது அடுத்த படமான 'ஆப்டர் ஆபரேஷன் லண்டன் கபே' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதேநேரத்தில் 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேகா ஷெட்டி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் இதற்காக அவர் தமிழ் மொழியும் கற்று வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது சொந்த மொழியில் சாதித்த பிறகு பிறமொழிகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எழுவது இயற்கையானது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக இரண்டு மொழிகளையும் கற்று வருகிறேன். நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தும் விதமாக சவால் நிறைந்த கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன்.
சினேகா, நதியா போன்ற நடிகைகள் தங்களது அழகு, திறமை போன்ற விஷயங்களால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே நானும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.
198 days ago
198 days ago