ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது
ADDED : 272 days ago
சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் 'சாரி' ( சேலை). 'சைக்கலாஜிக்கல் த்ரில்லர்' ஜானர் படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தில் ஆராத்யா தேவி மற்றும் சத்யா யாது ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் சாஹில் சம்பியல், அப்பாஜி அம்பரீஷ், கல்பலதா நடித்துள்ளனர். கிரி கிருஷ்ணா கமல் இயக்கி உள்ளார். ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி சார்பில் ரவி ஷங்கர் வர்மா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற 28ம் தேதி வெளியாகிறது.
சேலை அணிவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் படத்தின் கதை. வழக்கமான கவர்ச்சி காட்சிகளுடன் கான்றவர்சியான மெசேஜுடன் படம் வெளியாகிறது.