மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி
ADDED : 9 hours ago
நடிகர் விக்ரம் 63வது படத்தை போடி கே ராஜ்குமார் இயக்குகிறார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்து நான்கு படங்களை ஒப்பந்தம் செய்துள்ளேன் என பகிர்ந்துள்ளார். அதுபற்றி விசாரித்தபோது கிடைத்த தகவலின் படி, விக்ரமின் 64வது படத்தை விஷ்ணு எடவனும், விக்ரமின் 65வது படத்தை இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரும் இயக்க உள்ளனர். இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிறார்கள். விக்ரமின் 66வது படத்தை இயக்குவது யார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.