மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு
கடந்த 2017ம் ஆண்டில் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியான படம் 'மீசைய முறுக்கு'. ஹிப் ஹாப் ஆதி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி வெற்றி பெற்றார். ஏற்கனவே மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முதல் பாகத்தை தயாரித்த சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதியும் இந்த பாகத்தை தயாரிக்கிறார்.
நேற்று ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மீசைய முறுக்கு டீசர் ஒன்றை வெளியிட்டனர். அதன்படி, மீசைய முறுக்கு பீரியட் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டங்களில் நடைபெறும் படமாக உருவாகியுள்ளது. டீசர் வெளியாகி 24 மணிநேரத்தை நெருங்க உள்ள நிலையில் சுமார் 30 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.
இதில் சைத்ரா ஆர்சர், கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், நாசர், நரேன் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற சம்மரில் திரைக்கு வருகிறது என குறிப்பிட்டு அறிவித்துள்ளனர்.