மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
193 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
193 days ago
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் படம் 'நிறம் மாறும் உலகில்'. அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மல்லிகார்ஜுன் - மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரிட்டோ கூறியதாவது : இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா.
அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் 7ம் தேதி படம் வெளியாகிறது. படத்தில் ஜீவா சுப்பிரமணியம் , ஆதிரா, காவ்யா அறிவுமணி, ஐரா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். நான்கு பேருக்குமே கதையில் முக்கியத்துவம் இருக்கும். என்றார்.
193 days ago
193 days ago