மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
215 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
215 days ago
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ஹிந்திப் படமான 'சிக்கந்தர்' நேற்று முன்தினம் வெளியானது. இரண்டு நாட்களில் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யு-டியுப் தளத்தில் பெற்றுள்ளது. அனைத்து தளங்களிலும் சேர்த்து 6 கோடியே 50 லட்சம் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றுள்ளது.
அதிரடியான ஆக்ஷன் டீசர் ஹிந்தி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. ரம்ஜான் தினத்தில் இப்படம் வெளியாக உள்ளது. டீசரைப் பார்த்த பலரும் இப்படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து 2018ல் வெளிவந்த 'சர்கார்' படத்தின் ரீமேக்காக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
சஞ்சய் ராஜ்கோட் என்ற கதாபாத்திரத்தில் சல்மான் கான், சாய்ஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா, அமைச்சர் பிரதான் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளனர். படம் வெளிவந்த பின்புதான் 'சர்கார்' படமா இல்லையா என்பது தெரியும். ஆனால், அரசியல் படம் என்பது மட்டும் டீசரைப் பார்த்து எளிதில் உறுதி செய்யலாம்.
215 days ago
215 days ago