மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
213 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
213 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
213 days ago
1983ம் ஆண்டு கலைஞானம் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், வெளியான படம் 'மிருதங்க சக்கரவர்த்தி'. சிவாஜியின் மனைவியாக கேஆர் விஜயாவும், மகனாக பிரபுவும் நடித்திருந்தார்கள். கலைஞானம் கதை எழுத, பனசை மணி திரைக்கதை எழுதினார். சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்திருந்த படங்களில், இது முக்கியத்துவம் வாய்ந்த படம்.
குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தில் வசிக்கும் மிருதங்க வித்வான் சிவாஜி. அவரை மிருதங்க சக்ரவர்த்தி என்றே மக்கள் அழைப்பார்கள். அவர் தனது மகன் பிரபுவையும் மிருதங்க வித்வானாக வளர்ப்பார். ஆனால் அவருக்கு இதில் உடன்பாடில்லை. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். பின்னர் எப்படி இருவரும் இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், சிவாஜியின் நடிப்பு பேசப்பட்டது. என்றாலும் ஒரு சிலர் சிவாஜி நடிப்பை கிண்டல் செய்தார்கள். பயங்கரமான ஓவர் ஆக்டிங் என்றார்கள். இப்போதும் இந்த படத்தில் சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வருகிறது.
படம் வெளிவந்த காலத்தில் டாப்பில் இருந்த பத்திரிகை ஒன்று சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்திருந்தது. இதனால் சிவாஜி ரசிகர்கள் கொதிப்படைந்து அந்த பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பத்திரிகை அப்போது முன்னணியில் இருந்த நான்கு மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு பற்றி கருத்து கேட்டு வெளியிட்டது. அதில் எல்லோருமே சொல்லியிருந்து, 'சிவாஜி நடிக்கவில்லை மிருதங்க வித்வானாகவே வாழ்ந்தார்' என்று. இதனால் அந்த பத்திரிகை தங்கள் கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவதாக அறிவித்தது.
213 days ago
213 days ago
213 days ago