மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
207 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
207 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
207 days ago
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்து புகழ் பெற்றவர் வசுந்தரா. அதற்கு முன்பு அதிசயா என்ற பெயரில் வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் படங்களில் நடித்தார். இதுதவிர பக்ரீத், தலைக்கூத்தல் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்தார். கடந்த வருட இறுதியில் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தெலுங்கில் தற்போது இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நெகடிவ் சாயலில் நடித்து வருகிறேன். பிரியதர்ஷி கதாநாயகனாக நடிக்கிறார். பல வருட அனுபவம் வாய்ந்த அறிமுக இயக்குநர் சுனில் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் ரொம்பவே மாடர்ன் ஆன ஒரு கெத்தான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் ஹீரோ, இயக்குநர் எல்லோருமே இதில் சிறப்பாக அமைந்துவிட்டன.
கிட்டத்தட்ட தெலுங்கில் ஒரு நல்ல வழிகாட்டியான படம் கிடைத்திருப்பதாக தான் நான் நினைக்கிறேன். இனி வரும் நாட்களில் தெலுங்கு திரையுலகிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறேன். இது போன்ற மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.
தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து 'கலி' என்கிற படத்தில் நடித்திருக்கிறேன். இதிலும் மாடர்ன் பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன். என்னுடைய உண்மையான குணாதிசயத்திற்கு அப்படியே முற்றிலும் மாறான கதாபாத்திரம். அதனால் ரொம்பவே ரசித்து நடிக்க முடிந்தது. இதில் எனக்கு நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரம். லட்சுமி நாராயணன் ராஜு இந்த படத்தை இயக்கி வருகிறார். பிக்சல் புரொடக்சன்ஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த வருடம் எனது இரண்டு படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன. இன்னும் சில படங்கள் படப்பிடிப்பிலும் மற்றும் பேச்சு வார்த்தையிலும் இருக்கின்றன. அது குறித்து முறையாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியாகும். அதுபற்றி இப்போது நான் பேச முடியாது.
இனி பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்த மாடர்னான கொஞ்சம் கெத்தான, அதே சமயம் கொஞ்சம் நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக என்னுடைய ஹேர்ஸ்டைலில் கூட சில மாறுதல்களை செய்து இருக்கிறேன். என்கிறார் வசுந்தரா.
207 days ago
207 days ago
207 days ago