இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்!
ADDED : 250 days ago
தமிழில் ‛ரோஜா கூட்டம், டிஸ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை' போன்ற படங்களை இயக்கியவர் சசி. இவரது இயக்கத்தில் ஏற்கனவே ‛நூறு கோடி வானவில்' எனும் படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் உள்ளது.
இந்த நிலையில் சசி அடுத்து நடிகர் சசிகுமாரை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் துவங்குகின்றனர் என கூறப்படுகிறது.