உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர்

ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர்

தமிழில் வெப் தொடர்கள் தயாராவதும், வெளிவருவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான 'சுழல் 2' தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் முழுநீள காமெடி தொடராக 'செருப்புகள் ஜாக்கிரதை' என்ற தொடர் தயாராகி உள்ளது.

இதில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், சபிதா என பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் குரூப் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த வெப் தொடருக்கு, கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார்.

வைர வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். அதிகாரிகளின் ரெய்டுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் கொடுக்கிறார். அவரும் அவரது மகன் இளங்கோவும் செருப்பைத் தொலைத்து விடுகிறார்கள். அதைத் தேடி அலையும் பயணம்தான் கதை. இந்த வெப் தொடர், வரும் 28ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !