மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
197 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
197 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
197 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
197 days ago
திரைப்படத் தயாரிப்பாளரான சஷிகாந்த் இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள படம் 'டெஸ்ட்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா, இப்படம் தியேட்டர்களில் வெளிவந்தால் தன்னுடைய இமேஜ் கொஞ்சம் வளரும் என்று எதிர்பார்த்தாராம். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'இறைவன், அன்னபூரணி' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. கடந்த வருடம் நயன்தாரா நடித்த ஒரு தமிழ்ப் படம் கூட வெளியாகவில்லை.
'டெஸ்ட்' படம் நன்றாக வந்துள்ளதால் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடச் சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால், ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட எதிர்பார்த்ததற்கும் மேலாக அதிக தொகை கிடைத்திருக்கிறது. எனவே, நல்ல லாபத்திலேயே படத்தைக் கொடுத்துள்ளார் தயாரிப்பாளருமான சஷிகாந்த்.
ஒரு வேளை தியேட்டர்களில் வெளியாகி, எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் போவதை விட இதுவே சிறந்தது என அவர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்.
197 days ago
197 days ago
197 days ago
197 days ago