மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல்
தமிழ், மலையாள சினிமாவில் அடுத்த வாரம் தலா ஒரே ஒரு முக்கியமான படம்தான் வெளியாகிறது. தமிழில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படமும், மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படமும் வெளியாகிறது.
'எல் 2 எம்புரான்' படத்தை மலையாள சினிமாவில் இதுவரையில் எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவு பிரம்மாண்டமான வெளியீடாகத் திரையிட உள்ளார்கள். கேரளாவில் உள்ள 777 தியேட்டர்களில் 700 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாக ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வளவு தியேட்டர்களையும் 'எல் 2 எம்புரான்' படம் ஆக்கிரமித்துவிட்டால் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படத்திற்கு கேரளாவில் மிகக் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைக்கும்.
மேலும், 'எல் 2 எம்புரான்' படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் முதல் பாகமான 'லூசிபர்' படத்திற்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விக்ரமின் 'வீர தீர சூரன் 2' படத்திற்கு தமிழகத்தில் நிறைய தியேட்டர்கள் கிடைத்தாலும் 'எல் 2 எம்புரான்' போட்டியை எதிர்கொண்டே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.