உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட்

ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‛கருப்பு' படம் வெளியீட்டில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதுபற்றி ஆர்.ஜே பாலாஜி கொடுத்த அப்டேட், ‛‛ ‛கருப்பு' படத்தின் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சூர்யாவின் ரசிகர்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக படம் இருக்கும்.

நானும் இரண்டு வருடங்களாக இப்படத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறேன். நானும் இனி நிறைய நேரம் எடுத்துக் கொள்கிற எண்ணத்தில் இல்லை.
இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் படம் எப்போது ரிலீஸ் என்ற அப்டேட் உடன் உங்களை சந்திக்கிறேன். கண்டிப்பாக ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு இல்லை.

எனக்கும் தயாரிப்பாளர் பிரபுவுக்கும் சண்டை, இருவரும் சண்டையிடுவது மாதிரி வீடியோ, அவர் மீது வழக்கு தொடுக்க இருப்பது, இசையமைப்பாளருடன் சண்டை, தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளருக்குமே சண்டை என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் கடுப்பில் இருக்கிறீர்கள், ரொம்ப நாள் காத்திருப்பு உங்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது என தெரிகிறது. படம் எப்போது என்ற தகவலுடன் உங்களை ஒரு 10 நாட்களுக்குள் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்குமே இப்படம் ரொம்ப பிடிக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !