மகேஷ்பாபுவின் 'அத்தடு' 1500 முறை டிவியில் ஒளிபரப்பு: இப்படியும் ஒரு சாதனையா?
ADDED : 199 days ago
2005ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் 'அத்தடு'. திரிவிக்ரம் இயக்கிய இந்த படத்தில் மகேஷ் பாபு, திரிஷா, பிரகாஷ்ராஜ், சோது சூட், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், மணிசர்மா இசை அமைத்திருந்தார். வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் 'நந்து' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் இங்கு வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் 'அத்தடு' படம் தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பப்பட்ட முதல் படம் என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இத்தனை முறை எந்த படமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கான ஆதாரங்களோடு படக் குழுவினர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளனர்.