ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு
ADDED : 189 days ago
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி நாராயணன். கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் இவரின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோ ஒன்று வைரலானது. இது ஏஐ வீடியோ என்பது போன்று இன்ஸ்டாவில் ஒரு விளக்கம் கொடுத்தார் ஸ்ருதி.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டதாவது, வீடியோவுக்கு பின்னால் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் ஆண் குறித்து யாருமே கேள்வி கேட்கவில்லை .வீடியோவை பகிர்ந்தவர்கள், அதனால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பை சந்திக்கும் என 2 நொடிகள் கூட நினைக்கவில்லை. ஒரு பெண்ணை உடல், மனம், உணர்வு ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.