உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக்

பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக்

மும்பையை சேர்ந்த மாடல் அழகி பிருந்தா பரேக். ஏராளமான விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். விளம்பர படங்களில் குடும்ப பாங்காக நடித்தவர் 'மன்மதன்' படத்தில் கவர்ச்சியாக நடித்தார். தொடர்ந்து திருடிய இதையத்தை, சுதேசி, போக்கிரி, பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுனு ஒரு சந்திப்பு போன்ற படங்களிலும், நடித்தும், சில படங்களில் நடனமும் ஆடினார்.

வடநாட்டில் பிறந்தாலும் ஒரு சில ஹிந்தி படங்கள் தவிர பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளில் நடித்தார். தமிழில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. ஆனால் பெரும்பாலான படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்பட துறையிலிருந்து விலகி விட்டார்.

சினிமாவில் 'இவர் இப்படித்தான்' என்ற ஒரு இமேஜ் உருவாகி விட்டால் பின்னர் அதிலிருந்து வெளியே வருவது என்பது கஷ்டமான காரியம். அதற்கு பிருந்தா நல்ல உதாரணம். அழகும், திறமையும் இருந்தும், முதல் சில படங்களில் அவர் கவர்ச்சியாக நடித்ததால் கடைசி வரை கவர்ச்சி நடிகையாகவே இருந்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !