உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்!

அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்!


'ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்தபடியாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றுவதற்கு புதிய நபர்கள் தேவை என்று சமூக வலைதளங்களில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். அதை பார்த்துவிட்டு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், '10 உதவி இயக்குனர்களை மட்டுமே எடுப்பதற்கு முதலில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது இந்த 15 ஆயிரம் பேரில் இருந்து என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து 20 நபர்களை தேர்வு செய்யப் போகிறேன். என்னை டேக் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடும் அனைவருக்கும் இதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஒரு பதிவு போடுகிறார் அஸ்வத் மாரிமுத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !