'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்!
ADDED : 365 days ago
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 23வது படமான 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெற்று வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி வாரத்தையொட்டி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.