உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்?

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்?


அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு ஒரு வாரத்திற்கு முன்பாக வெளிவந்தது. அதன்பின் படம் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் டோலிவுட் வட்டாரங்களில் இந்தப் படம் பற்றி சில தகவல்கள் பரவி வருகின்றன.

முதலில் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றார்கள். ஆனால், தற்போது மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தன்னிடம் தேதிகள் இல்லாததால் பிரியங்கா சோப்ரா நடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், மற்ற முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேசி வருகிறார்களாம். ஜான்வி கபூர் நடிப்பது ஏறக்குறைய உறுதி என்கிறார்கள். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்காக அட்லி குழுவினர் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். விரைவில் அவர்கள் யார் என்பது முடிவு செய்யப்பட்டுவிடுமாம். இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டுமென்பதால் அதற்கேற்றபடி கதாநாயகி தேர்வு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் என்பது கோலிவுட் தகவல். இந்தப் படம் பற்றிய பேச்சுவார்த்தை ஆரம்பமான உடனேயே அவர்தான் இசை என்று முடிவு செய்துவிட்டார்கள். அனிருத் இந்தப் படத்தில் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !