மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
165 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
165 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரகுமான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் 'ஜிங்குச்சா' இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது.
இப்போதெல்லாம் ஒரு பாடலோ, டீசரோ, டிரைலலோ வெளியானால் 'டிரென்ட்' ஆக வேண்டும், 'வைப்' ஆக வேண்டும் என்று இன்றைய இளம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே இரவில் மில்லியன்களைக் கடந்து அதன் பார்வை போனால்தான் பாடல் சூப்பர் ஹிட் என்கிறார்கள்.
அந்த விதத்தில் 'ஜிங்குச்சா' பாடல் இரண்டு நாளில் இருபது மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடல் தற்போது யு டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல் மெல்ல மெல்ல ரசிகர்களிடம் 'வைப்' ஆகிக் கொண்டிருக்கிறது.
'ரெட்ரோ' கனிமா பாடலைத் தொடர்ந்து, இந்த 'ஜிங்குச்சா'வின் ரீல்ஸ்களும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
165 days ago
165 days ago