உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு!

காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு!

‛பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 49வது படத்தில் நடிக்க உள்ளார். கல்லூரி கதையில் உருவாகும் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும், ரவுடியாகவும் நடிக்கிறார் சிம்பு. அந்த வகையில் இந்த படம் காலேஜ் கேங்ஸ்டர் கதையில் உருவாக இருப்பதாக தெரிகிறது.

அதோடு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்காக சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் தலையில் முடி வளர்த்து வந்த சிம்பு, தக்லைப் படத்திலும் தலையில் அதிக முடி வைத்த கெட்டப்பிலேயே நடித்திருக்கிறார். இந்த நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்திற்காக தலை முடி மற்றும் தாடியை முழுமையாக எடுத்துவிட்டு இளவட்ட கல்லூரி மாணவன் லுக்கிற்கு மாறப்போகிறார் சிம்பு. அதோடு இந்த படத்தின் பாடல் காட்சிகளிலும் புதுமையான நடன அசைவுகளை வெளிப்படுத்தி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தப் போகிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !