உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி !

இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி !


விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் பாவனி. அதே போல் விஜய் டிவியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அமீர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்கள். அப்போது தனது காதலை பாவனி இடத்தில் வெளிப்படுத்தினார் அமீர். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு காதலர்களாக வலம் வந்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

அமீர்-பாவனி திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தனது கணவருடன் கலந்து கொண்டதோடு, ஏராளமான சின்னத்திரை பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி உள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !